பிளஸ் 2 தேர்வில் ரெட்டணை கென்னடி பள்ளி மாணவர்கள் சாதனை

ரெட்டணை கென்னடி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 2 பொதுத்தேர்வில், தொடர்ந்து 13 வது ஆண்டாக 100 சதவீதம் தேர்ச்சி பெற்று மாணவர்கள் சாதனை புரிந்தனர்.

Update: 2024-05-09 05:41 GMT

ரெட்டணை கென்னடி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 2 பொதுத்தேர்வில், தொடர்ந்து 13 வது ஆண்டாக 100 சதவீதம் தேர்ச்சி பெற்று மாணவர்கள் சாதனை புரிந்தனர். 

விழுப்புரம் மாவட்டம் மயிலம் அடுத்த ரெட்டணை கென்னடி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 பொதுத்தேர்வு எழுதிய 104 மாணவர்களும் தேர்ச்சி பெற்றனர். இதன் மூலம் இப்பள்ளி 100 சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளது. தொடர்ந்து 13 ஆண்டுகளாக இப்பள்ளி 100 சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

இதில் மாணவிகள் கோபிகா 600-க்கு 572 மதிப்பெண்களும், ஸ்வேதா 565 மதிப் பெண்களும், பாத்திமா 562 மதிப்பெண்களும், மாணவர்கள் சஞ்சய் 552 மதிப்பெண்களும், வருண்குமார் 550 மதிப்பெண் களும் பெற்று சிறப்பிடம் பிடித்தனர். மேலும் 500 மதிப்பெண் களுக்கு மேல் 33 மாணவர்களும், 550 மதிப்பெண்களுக்கு மேல் 5 மாணவர்களும், 450 மதிப்பெண்களுக்கு மேல் 27 மாணவர்களும் பெற்றுள்ளனர். இதையடுத்து சாதனை படைத்த மாணவர்களை தாளாளர் சண்முகம் உட்பட பலரும்  பாராட்டினர்.

Tags:    

Similar News