காவல் நிலையத்தில் வாகன ஏலம் அனுமதி கட்டணத்தை திரும்ப பெறுதல்
மயிலாடுதுறை துணை காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நடைபெற்ற வாகன ஏலத்தில் கலந்து கொண்ட 275பேர் முன் வைப்புத்தொகையை பெற்றுச் சென்றனர்;
Update: 2023-12-12 01:03 GMT
காவல் நிலையத்தில் வாகன ஏலம் அனுமதி கட்டணத்தை திரும்ப பெறுதல்
மயிலாடுதுறை மாவட்டத்தில் மதுவிலக்கு வேட்டையின் போது பிடிபட்டதும், உரிமையாளரால் விட்டுச் சென்றதுமான 81 இருசக்கர வாகனங்களும் 11 நான்கு சக்கர வாகனங்களும் , இன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை அவைகள் ஏலம் விடப்பட்டது. இந்த ஏலத்தில் 275 க்கு மேற்பட்டோர் கலந்து கொண்டு ஏலம் எடுத்தனர். ஏலம் கேட்கும் முன்பு வைப்புத் தொகை ரூபாய் ஆயிரத்தை செலுத்தி இருந்தனர். இந்தத் தொகை மாலை ஐந்து மணி அளவில் கட்டியிருந்த அனைவருக்கும் திருப்பி அளிக்கப்பட்டது.