கருப்பாநதி அணையிலிருந்து 150 கனஅடி நீா் வெளியேற்றம்
கருப்பாநதி அணையிலிருந்து 150 கனஅடி நீா் வெளியேற்றபடுகிறது.;
By : King 24X7 News (B)
Update: 2023-12-11 16:22 GMT
அணை
தென்காசி மாவட்டம் கடையநல்லூா் சுற்றுவட்டாரப் பகுதியில் தொடர்ந்து கன மழை பெய்து வருவதால் கருப்பாநதி அணை முழு கொள்ளளவு எட்டியுள்ளது, இதனால் அணையிலிருந்து இன்று 150 கனஅடி நீா் வெளியேற்றப்பட்டது. கருப்பாநதி அணைப் பகுதியில் நேற்று இரவு மழை பெய்தது.
இதனால், அணைக்கு விநாடிக்கு 150 கனஅடி தண்ணீா் வரத் தொடங்கியது. அணை ஏற்கெனவே நிரம்பிவிட்டதால், அணைக்கு வந்த நீா் முழுவதும் கால்வாய்கள் வழியாக வெளியேற்றப்பட்டது.