ஆத்துப்பாளையம் அணையில் தண்ணீர் திறப்பு

ஆத்துப்பாளையம் அணையிலிருந்து பாசனத்துக்காக இன்று தண்ணீர் திறந்து விடப்பட்டது.

Update: 2024-01-03 10:58 GMT

ஆத்துப்பாளையம் அணையிலிருந்து தண்ணீர் திறந்து விட்ட மாவட்ட ஆட்சியர் தங்கவேல் கரூர் மாவட்டம், நீர்வளத்துறை சார்பில் இன்று ஆத்துப்பாளையம் நீர்த்தேக்கத்திலிருந்து பாசனத்திற்கு தண்ணீரை மாவட்ட ஆட்சியர் தங்கவேல் திறந்து வைத்தார். உடன் அரவக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் இளங்கோ உடன் இருந்தார்.

அணையில் தற்பொழுது உள்ள நீர் இருப்பு மற்றும் எதிர்பார்க்கப்படும் நீர்வரத்து ஆகியவற்றை கணக்கில் கொண்டு நொய்யல் பிரதான கால்வாயில் 60 கன அடி அளவில் தண்ணீர் திறந்து விடப்பட்டது. நொய்யல் பிரதான கால்வாயில் திறக்கப்படும் நீரின் அளவு படிப்படியாக உயர்த்தப்பட்டு கால்வாயில் 90 கன அடி வரை தண்ணீர் விடப்படும். இந்நீர்த்தேக்கத்தில் பாசனத்திற்காக தேக்கப்பட்ட நீர் பிரதான வாய்க்கால் மூலம் சென்று மொத்தம் 19480 ஏக்கர் புஞ்சை நிலங்களுக்கு பாசனவசதி அளிக்கிறது.

இதன் மூலம் கரூர் மாவட்டத்தில் உள்ள அஞ்சூர், துக்காச்சி, கார்வழி, தென்னிலை, முன்னூர், அத்திப்பாளையம், குப்பம், புன்னம், வேட்டமங்கலம், புஞ்சைபுகளூர், புஞ்சைதோட்டக்குறிச்சி, ஆத்தூர், புஞ்சைகடம்பக்குறிச்சி, மண்மங்கலம், குப்பிச்சிபாளையம், மின்னாம்பள்ளி, காதப்பாறை, பஞ்சமாதேவி ஆகிய கிராமங்கள் பயனடைகின்றன என மாவட்ட ஆட்சியர் தங்கவேல் தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் கீழ்பவானி வடிநில உபகோட்டம் காங்கயம், உதவி செயற்பொறியாளர் அப்புசாமி, பாசன பிரிவு க.பரமத்தி உதவி பொறியாளர் சதீஸ்வரன், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் கார்த்திகேயன் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News