பெருஞ்சாணி அணையில் தண்ணீர் திறப்பு

பெருஞ்சாணி அணையிலிருந்து சாகுபடி பணி மற்றும் வைகாசி விசாகத் திருவிழாவிற்காக கோவில் தெப்பக்குளத்தில் தண்ணீர் நிரப்புவதற்காக நீர் திறக்கப்பட்டுள்ளது.

Update: 2024-05-12 03:24 GMT

பெருஞ்சாணி அணை

தமிழ்நாட்டில் வெயில் கொடுமை வாட்டி வதைத்து வந்தது. அக்னி நட்சத்திரம் தொடங்குவதற்கு முன்பே வெயில் சுட்டெரித்தது. பல் வேறு நகரங்களில் 100 டிகி ரியை வெயில் தாண்டியது. இந்த நிலையில் கடந்த 4ம் தேதி அக்னி நட்சத்திரம் தொடங்கியது. அதன் பின்னர் 2 நாட்கள் வரை வெயில் சுட்டெரித்த நிலையில், தற்போது ஒரு சில மாவட் டங்களில் மழை பெய்ய தொடங்கி உள்ளது. குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலையையொட்டி உள்ள  மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது.

குமரி மாவட்டத்திலும் கடந்த இரு தினங்களாக மழை பெய்து வருகிறது.பெருஞ்சாணி அணை யில் இருந்து 21 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டது.தற்போது மழை பெய்ததாலும், சாகுபடி பணிகள் தொடங்கி உள்ளதால் சானல்களில் அதிகளவில் தண்ணீர் தேவை என்பதாலும், வைகாசி விசாக திருவிழாவுக்காக கோயில் தெப்பக்குளங்களில் தண்ணீர் நிரம்ப வேண்டும் என்பதாலும் பெருஞ்சாணி அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது என்று அதிகாரிகள் கூறினர்.

Tags:    

Similar News