ராமநாதபுரம் அருகே பயிற்சேதங்களுக்கு நிவாரணம்: தீர்மானம்
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே கிராமசபைக் கூட்டத்தில் பயிர் சேதங்களுக்கு நிவாரணம் வழங்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே கே.நெடுங்குளம் ஊராட்சிக்கு உட்பட்ட தலைவநாயக்கன்பட்டி கிராமத்தில், நேற்று குடியரசு தின விழாவை முன்னிட்டு,கிராம சபை கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்திற்கு ஊராட்சி மன்ற தலைவர் புளியம்மாள் மாரிமுத்து தலைமை தாங்கினார். வட்டார வளர்ச்சி அலுவலர் முத்துராமலிங்கம் முன்னிலை வகித்தார்.துணைத் தலைவர் ஜெயராமன்,பள்ளி தலைமை ஆசிரியர் ரவிச்சந்திரன்,ஊராட்சி செயலர் முகமது ஹக்கீம் உட்பட கிராம பொதுமக்கள் ஏராளமான கலந்து கொண்டனர்.
கூட்டத்தில், தொடர் மழையால் நெல், பருத்தி, சோளம், மிளகாய் போன்ற பெயர்கள் சேதமடைந்து வீணாகி விட்டதால், பெரும் நஷ்டமடைந்த விவசாயி களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் மற்றும் ஜல்ஜீவன் திட்டம் மூலம் வீடுகளுக்கு குடிநீர் வழங்குவது குறித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதே போல் கீழராமநதி ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவர் பழனி அழகர்சாமி தலைமையில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது.ஊராட்சி ஒன்றிய அலுவலக கணக்கர் தெய்வ மணிகண்டன் முன்னிலை வகித்தார்.
துணைத் தலைவர் மைதீன் வேளாண்மை உதவி இயக்குனர் சிவராணி, பள்ளி தலைமை ஆசிரியை சுந்தரி,ஊராட்சி செயலர் முத்துராமு மற்றும் கிராம பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில், ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் நெல், மிளகாய், சோளம், பருத்தி போன்ற பயிர்கள் தொடர் மழை காரணமாக மிகுந்த சேதம் அடைந்து வீணாகின. இதனால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு தகுந்த நிவாரணம் வழங்க வேண்டும் என்று கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மேலும் கிராம வளர்ச்சி திட்டம், சுத்தமான சுகாதாரமான ஊராட்சி, போன்றவை குறித்து தீர்மானம் நிறைவேற்றப் பட்டது .இதே போல் மேலராமநதி ஊராட்சியில், ஊராட்சி மன்ற தலைவர் ஞானம்மாள் தலைமை வகித்தார்.
இக்கூட்டத்தில் ஐக்கிய நாடுகள் சபையின் திட்ட அலுவலகத்தின் மூலம் ஜல்ஜீவன் மிஷன் திட்டத்திற்காக பணி புரியும் அலுவலர்கள் கலந்து கொண்டு தண்ணீர் பரிசோதனை முறை குறித்தும், குடிநீர் இணைப்பு வழங்குதல் குறித்தும் விவாதித்தனர். மேலும் இக்கூட்டத்தில் மின்சார வாரிய அலுவலர்கள், மாவட்ட வேளாண் துறை அலுவலர்கள், பொது சுகாதாரத்துறை அலுவலர்கள்,
தபால் துறை அலுவலர்கள் உட்பட பல துறை அலுவலர்கள் கலந்து கொண்டு கிராம சபை கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு கிராமத்திற்கு தேவையான அடிப்படைத் தேவைகளை தீர்மானமாக நிறைவேற்றினர்.
இதே போல்ஆனையூர், பாக்குவெட்டி உட்பட ஏராளமான ஊராட்சிகளில் கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது.படம் கமுதி அருகே கே நெடுங்குளம் ஊராட்சி தலைவநாயக்கன்பட்டி கிராமத்தில் ஊராட்சி மன்ற தலைவர் புளியம்மாள் மாரிமுத்து தலைமையில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது.