கும்பகோணத்தில் மத நல்லிணக்க நிகழ்ச்சி
சமய நல்லிணக்கத்தை வலியறுத்தும் வகையில் கிஸ்வா மற்றும் ஜமாத்தே இஸ்லாமி ஹிந்த் சார்பில் பெருநாள் சந்திப்பு நிகழ்ச்சி கும்பகோணம் தூய அலங்கார அன்னை பேரவை வளாகத்தில் நடைபெற்றது.
கிஸ்வா தலைவர் பி.எஸ்.யூசுப் தலைமை தாங்கினார். ஜமாத்ஆதே இஸ்லாமி ஹிந்த் கும்பகோணம் கிளை தலைவர் அப்துல் கலாம் ஆசாத் மாவட்ட அமைப்பாளர் முகம்மது யூனூஸ், கிஸ்வா செயலாளர் ஜாகிர் உசேன் ஆகிய முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக சூரியனார் கோயில் ஆதீனம் குருமகா சந்நிதானம் மகாலிங்க தேசிக பரமாச்சாரியா சுவாமிகள், கும்பகோணம் பேரவை பங்குத் தந்தை மற்றும் மறை மாவட்ட முதன்மை தந்தை பிலோமின்தாஸ் ஆகியோர் சமய நல்லிணக்கத்தை பற்றி சிறப்புரை நிகழ்த்தினர்.
பெருநாள் சந்திப்பு நிகழ்ச்சி ஏன் என்பதை பற்றியும் ஜமாத்தே இஸ்லாமி ஹிந்த் மாநில ஆலோசனை குழு உறுப்பினர் முகமது அமீன் மற்றும் முனைவர் ஞானசேகரன் விளக்கி பேசினார். விழாவில் அனைத்து சமுதாய பிரமுகர்கள், கிஸ்வா நிர்வாகிகள், செயற்குழு உறுப்பினர்கள், ஜமாத்தே இஸ்லாமி ஹிந்த் நிர்வாகிகள், கும்பகோணம் தொழிலதிபர்கள், வணிகர் நல சங்க நிர்வாகிகள், வர்த்தக பிரமுகர்கள்,உள்பட திரளானோர் கலந்து கொண்டனர். முடிவில் கிஸ்வா செயலாளர் திட்ட குழு தலைவர் அக்பர் அலி நன்றி கூறினார்.