தாமிரபரணி கரையோர பகுதியில் ஆக்கிரமிப்பு அகற்றம்
நெல்லை மாநகர தாமிரபரணி கரையோர பகுதியில் ஆக்கிரமிப்பு அகற்றம்.;
Update: 2024-03-08 05:45 GMT
ஆக்கிரமிப்பு அகற்றம்
திருநெல்வேலி மாநகரில் தாமிரபரணி கரையோர பகுதிகளான கருப்பந்துறை, மீனாட்சிபுரம், கைலாசபுரம், சிந்துபூந்துறை, மணிமூர்த்தீஸ்வரம் உள்ளிட்ட இடங்களில் ஆக்கிரமிப்புகளை கண்டறிந்து அகற்ற மாவட்ட நிர்வாகத்திற்கு புகார்கள் வந்தன. அதன்பேரில் இன்று (மார்ச் 8) நீர் வளத்துறை உதவி பொறியாளர் ரமேஷ்குமார் தலைமையில் கைலாசபுரம் பகுதியில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது. அப்போது போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.