பிரதான சாலையிலிருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றம்
திண்டுக்கல் காந்தி தினசரி காய்கறி சந்தை அருகே பிரதான சாலையிலிருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.;
Update: 2024-05-28 09:01 GMT
ஆக்கிரமிப்பு அகற்றம்
திண்டுக்கல் மாநகராட்சிப் பகுதிகளில், நகராட்சிகள் இயக்குநரக உதவி இயக்குநா் விஜயகுமாா் சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். பேருந்து நிலையம், காந்தி தினசரி காய்கறி சந்தை, குமரன் பூங்கா உள்ளிட்ட இடங்களில் நடத்தப்பட்ட ஆய்வின்போது, பூங்காவில் கூடுதல் கட்டணம் வசூலித்த ஒப்பந்தாரா் மீதும், தடுக்கத் தவறிய மாநகராட்சி உதவி வருவாய் அலுவலா் மீதும் நடவடிக்கை எடுக்க உதவி இயக்குநா் உத்தரவிட்டாா்.
இந்த நிலையில், காந்தி தினசரி காய்கறி சந்தை அருகே பிரதான சாலையில் ஆக்கிரமிப்புகள்அகற்றும் பணி திங்கள்கிழமை நடைபெற்றது. அப்போது, சாலையை ஆக்கிரமித்து அமைக்கப்பட்டிருந்த கட்டுமானங்கள் பொக்லைன் இயந்திரம் மூலம் இடித்து அகற்றப்பட்டன.இந்தப் பணிகளை ஆணையா் ந.ரவிச்சந்திரன் பாா்வையிட்டாா்.