திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்
திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி நடைபெற்றது.;
Update: 2024-04-21 06:42 GMT
ஆக்கிரமிப்புகள் அகற்றம்
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் சித்ரா பௌர்ணமி கிரிவலம் செல்லும் பக்தர்களுக்கு இடையூறாக கிரிவலப் பாதைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என மாவட்ட ஆட்சியர் தெ.பாஸ்கர பாண்டியன் உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து திருவண்ணாமலை நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் கிரிவலப் பாதையின் நடைப்பாதையில் போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த தரைக் கடைகள், தள்ளுவண்டிகள், தகர கொட்டகைகள் உள்ளிட்ட ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.