வழுதரெட்டியில் மயான ஆக்கிரமிப்புகள் அகற்றம்
உயர்நீதிமன்ற உத்தரவையடுத்து வழுதரெட்டியில் உள்ள மயான ஆக்கிரமிப்புகள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அகற்றப்பட்டது.
விழுப்புரம் வழுதரெட்டி காலனி பகுதியில் சுடுகாடு உள்ளது. இந்த இடத்தை ஆக்கிரமிப்பு செய்து 5 ஓலை குடிசைகள், 3 கூரை வீடுகள், ஒரு கான்கிரீட் வீடு என 9 வீடுகளும் மற்றும் ஒரு அம்மன் கோவிலும் கட்டப்பட்டுள்ளது. இந்த ஆக்கிரமிப்புகள் கடந்த 40 ஆண்டுகளாக இருப்பதாக புகார்கள் எழுந்தது.
நகராட்சிக்கு சொந்தமான இந்த சுடுகாடு ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டு மென அப்பகுதியை சேர்ந்த நபர் ஒருவர், சென்னை ஐகோர்ட்டில் பொதுநல வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த சென்னை ஐகோர்ட்டு, அந்த சுடுகாடு ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டுமென உத்தரவிட்டது. இதனை தொடர்ந்து ஆக்கிரமிப்பு அகற்றும் பணி நடந்தது. அப்போது சிலர், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து திரண்டு வந்தனர். உடனே அவர்களை போலீசார் தடுத்து அப்புறப்படுத்தினர். பி
ன்னர் பலத்த போலீஸ் பாதுகாப்புடன், விழுப்புரம் நகரமைப்பு அலுவலர் ரவிச்சந்திரன் மற்றும் வருவாய்த்துறை அலுவலர் கள் மேற்பார்வையில் பொக்லைன் எந்திரம் மூலம் ஆக்கிரமிப்பு கள் அகற்றப்பட்டன. வழுதரெட்டி காலனி தந்தை பெரியார் தெரு வில் இருந்த 2 கூரை வீடுகள், ஆளில்லாத கொட்டகை ஆகியவை அகற்றப்பட்டது.