செம்பரம்பாக்கம் ஏரிக்கரையில் சீமை கருவேல மரங்கள் அகற்றம்

ஏரி கரையில் 5 கி.மீ, துாரத்திற்கு கரையில் வளர்ந்திருந்த சீமை கருவேல மரங்கள் ஜே.சி.பி. இயந்திரம் மூலம் அகற்றப்பட்டது

Update: 2023-12-24 06:20 GMT

செம்பரம்பாக்கம் ஏரிக்கரையில் சீமை கருவேல மரங்கள் அகற்றம்

சென்னையின் குடிநீர் ஆதாரமான செம்பரம்பாக்கம் ஏரி, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்ட எல்லையில் 6,300 ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்து அமைந்துள்ளது. இந்த ஏரியின் 8 கி.மீ., கரையில் பல இடங்களில் சீமை கருவேல மரங்கள் வளர்ந்து புதர் மண்டி காணப்பட்டது. இதனால், ஏரிக்கரை பலவீனமாவதோடு, புதர் பகுதியில் சமூக விரோத செயல்களும் நடந்து வந்தன. இந்நிலையில், குன்றத்துார் அருகே, நந்தம்பாக்கம் முதல், மலையம்பாக்கம் வரை இந்த ஏரிக்கரையின் 5 கி.மீ., துாரத்திற்கு கரையில் வளர்ந்திருந்த சீமை கருவேல மரங்கள் ஜே.சி.பி., இயந்திரம் வாயிலாக அகற்றப்பட்டது
Tags:    

Similar News