அனுமதியின்றி அமைக்கப்பட்ட மேடை அகற்றம் !
சிங்கம்புணரியில் அனுமதியின்றி அமைக்கப்பட்ட மேடை அகற்றம் - தேமுதிகவினர் வாக்குவாதம்
சிங்கம்புணரியில் தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அதிமுக வேட்பாளருக்கு ஆதரவாக காரைக்குடி - திண்டுக்கல் நெடுஞ்சாலையில் பிரச்சாரம் செய்ய அனுமதி வழங்கப்பட்டது.
இந்நிலையில் தேமுதிக ஒன்றிய நகர நிர்வாகிகள் அனுமதியின்றி சாலையை மரித்து பெரிய மேடை அமைத்திருந்தனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு பொதுமக்கள் சிரமப்படும் சூழ்நிலை ஏற்பட்டது. அங்கு வந்த பறக்கும் படை அதிகாரிகள் மேடை அமைக்க வழங்கப்பட்ட ஆவணங்கள் குறித்து கேட்டனர்.
இதில் பிரேமலதா விஜயகாந்த் பேசுவதற்கு ஒரு ஒலிபெருக்கி மற்றும் 100 கட்சிக்கொடிகளும் கட்ட அனுமதி கேட்டதாகவும், அதற்கு மட்டுமே அனுமதி கொடுத்ததால் மேடை பகுதியில் வைக்கப்பட்டிருந்த 10க்கும் மேற்பட்ட பிளக்ஸ் பேனர்கள் மேடை, கொடி, மற்றும் ஸ்பீக்கர் ஆகியவற்றை அகற்ற தேர்தல் பறக்கும் படை அலுவலர் கிருஷ்ணகுமார் கட்சி நிர்வாகிகளிடம் கூறினார்.
இதையடுத்து அங்கு குவிந்த தேமுதிக நிர்வாகிகள் அதிகாரியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதை தொடர்ந்து துணை ராணுவப் படையினர் அங்கு வரவழைக்கப்பட்டனர். அதன் பின் கட்சி நிர்வாகிகள் மேடைகளை அகற்றிக் கொள்வதாக உறுதியளித்தனர்.