திருச்செங்கோடு நகராட்சி கடை உரிமையாளர்களுக்கு வாடகை தள்ளுபடி
கொரோனா காலத்தில் வாடகை கட்ட முடியாமல் அவதிப்பட்ட நகராட்சி கடை உரிமையாளர்களுக்கு வாடகை தள்ளுபடி திருச்செங்கோடு நகர்மன்ற கூட்டத்தில் அறிவிக்கபட்டுள்ளது.;
By : King 24X7 News (B)
Update: 2024-01-09 06:45 GMT
நகராட்சி கூட்டம்
திருச்செங்கோடு நகர் மன்றத்தின் சாதாரண கூட்டம் நகர்மன்ற கூட்ட அரங்கில் நடைபெற்றது. நகர் மன்ற தலைவர் நளினி சுரேஷ்பாபு தலைமையில் நடைபெற்ற கூட்டத்திற்கு ஆணையாளர் சேகர் பொறியாளர் சரவணன்,மேலாளர் குமரேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கொரோனா காலத்தில் சிரமப்பட்ட நகராட்சி கடைகள் உரிமையாளர்களுக்கு வாடகை தள்ளுபடி செய்திருப்பதற்கு நகர்மன்ற தலைவருக்கும் தமிழக முதல்வருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்ள ப்பட்டது தொடர்ந்து 52 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.