ரேணுகாம்பாள் ஆலய தேர் திருவிழா
ஆரணி அருகே ரேணுகாம்பாள் ஆலய தேர் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது.
Update: 2024-05-19 14:32 GMT
திருவண்ணாமலை மாவட்டம் ,ஆரணி அடுத்த முள்ளண்டிரம் கிராமத்தில் ரேணுகாம்பாள் ஆலய தேர் திருவிழா இன்று வெகு விமர்சையாக நடைபெற்றது. முன்னாள் அமைச்சர் சேவூர் இராமச்சந்திரன் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார். இதனைத் தொடர்ந்து தேரை வடம் பிடித்து இழுத்து தேர் திருவிழாவை தொடங்கி வைத்தார்.இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.