பிற்படுத்தப்பட்டோர் நல விடுதிகளில் பழுது பார்ப்பு பணி
ஈரோடு மாவட்டத்தில் உள்ள பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நல விடுதிகளில் ரூ. ள ரூ.85.2 லட்சம் செலவில் பழுது பார்க்கும் பணிகள் நடைபெறுவதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.
Update: 2024-01-23 05:54 GMT
ஈரோடு மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகப்பிற்படுத்தப்பட்டோர் நலத்துறையின் கீழ் சொந்தக் கட்டடங்களில் இயங்கி வரும் விடுதிகளில் 2023-24 ஆம் ஆண்டிற்கான சிறப்பு பழுது மற்றும் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள ரூ.85.2 இலட்சம் அரசால் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது .தொடர்ந்து அரசு மிபிவ நல பள்ளி மாணவியர் விடுதி-அத்தாணி, அரசு மிபிவ நல பள்ளி மாணவர் விடுதி- காவிலிபாளையம், அரசு பிவ நல பள்ளி மாணவியர் விடுதி-மூங்கில்பட்டி, அரசு பிவ நல பள்ளி மாணவியர் விடுதி-சத்தியமங்கலம், அரசு பிவ நல பள்ளி மாணவியர் விடுதி-புஞ்சை புளியம்பட்டி, அரசு பிவ நல பள்ளி மாணவியர் விடுதி- கோபிசெட்டிபாளையம், அரசு பிவ நல பள்ளி மாணவியர் விடுதி-அவல்பூந்துறை ஆகிய 7 விடுதிகளில் தண்ணீர் வசதி மின்சார உபகரண பராமரிப்பு பணி, கதவு ஜன்னல்கள் சீரமைத்தல், சமையலறை பழுதுகள், விடுதி கட்டடங்களுக்கு, வர்ணம் பூசுதல் மற்றும் முதலிய பணிகள் பொதுப்பணித்துறை மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜகோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.