ரூ 4.75 கோடி மதிப்பில் கோவில்களில் திருப்பணி

ஈரோடு மாவட்டத்தில் உள்ள பல்வேறு கோவில்களில் ரூ 4.75 கோடி மதிப்பில் திருப்பணிகளை அமைச்சர்கள் சேகர்பாபு, முத்துசாமி ஆகியோர் துவக்கி வைத்தனர்.

Update: 2024-02-09 08:21 GMT

திருப்பணிகள் துவக்கம் 

ஈரோடு திண்டல் அருள்மிகு வேலாயுதசாமி திருக்கோவில் வாளகத்தில் ரூ.4.75 கோடி மதிப்பீட்டில் பல்வேறு திருக்கோவில்களின் திருப்பணிகளை, மாவட்ட ஆட்சித்தலைவர் ராஜ கோபால் சுன்கரா தலைமையில், தமிழக மதுவிலக்கு அமைச்சர் சு. முத்துசாமி மற்றும் தமிழக இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் திரு.பி.கே.சேகர்பாபு ஆகியோர் துவக்கி வைத்தார். திண்டல் அருள்மிகு வேலாயுதசாமி திருக்கோவிலில் ரூ.2.11 கோடி மதிப்பீட்டில் ஐந்து நிலை கிழக்கு இராஜகோபுரம் நிர்மாணம் செய்யும் பணியினையும், சென்னிமலை அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில், ரூ.93.00 இலட்சம் மதிப்பீட்டில் பசுமடம் கட்டும் பணியினையும், அருள்மிகு தம்பிகலை அய்யன் சுவாமி திருக்கோவிலில் ரூ.26.00 இலட்சம் மதிப்பீட்டில் வணிக வளாகம் கட்டும் பணியினையும், பவானி அருள்மிகு சங்கமேஸ்வரர் திருக்கோவிலில் ரூ.51.00 இலட்சம் மதிப்பீட்டில் யானை நினைவு மண்டபம் மற்றும் ரூ.34.50 இலட்சம் மதிப்பீட்டில் பணியாளர் மற்றும் செயல் அலுவலர் குடியிருப்பு மராமத்து பணிகளையும் மற்றும் அந்தியூர் அருள்மிகு செல்லீஸ்வரர் திருக்கோவிலில் ரூ.60.00 இலட்சம் மதிப்பீட்டில் திருமதில் சுவர் கட்டும் பணியினையும் என மொத்தம் ரூ.4.75 கோடி மதிப்பீட்டில் பல்வேறு திருக்கோவில் திருப்பணிகளை துவக்கி வைத்து, பணிகளை விரைவாக முடித்திட பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டுமென தொடர்புடைய அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்கள்.
Tags:    

Similar News