தண்ணீர் பந்தல் அமைக்க திமுக கிழக்கு மாவட்ட செயலாளர் அறிக்கை
கோடை வெப்பத்தை முன்னிட்டு தர்மபுரி கிழக்கு மாவட்டம் முழுவதும் நீர்மோர் பந்தல் திறக்க வேண்டும் திமுக கிழக்கு மாவட்ட செயலாளர் தடங்கம் சுப்பிரமணி அறிக்கை வெளியிட்டுள்ளார்.
தர்மபுரி மாவட்டத்தில், நிலவும் கடும் கோடை வெப்பத்தை முன்னிட்டு, தர்மபுரி கிழக்கு மாவட்டம் முழுவதும் பொது மக்கள் அதிகமாக கூடும் இடங்களில் நீர்மோர் பந்தலை திமுக நிர்வாகிகள் மற்றும் தோழர்கள் அமைத்து உதவிட வேண்டும் என கிழக்கு மாவட்ட திமுகசெயலாளர் தடங்கம் சுப்ரமணி கேட்டுக் கொண்டுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட் டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,தமிழகத்தில் கோடை காலம் தொடங்கி வெயில் தாக்கம் அதிகரித்து வருகிறது. வரும் நாட்களில் இன்னும் அதிகமாக வாய் புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கொளுத்தும் கோடை வெயிலில் பொதுமக்களின் தாகம் தீர்த்திடும் வகையில் தமிழக முதல்வர் முக ஸ்டாலின் ஆணைகிணங்க, திமுக இளைஞர் அணி செயலாளர், விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதய நிதி ஸ்டாலின் அறிவுறுத்தலின் படி, தர்மபுரி கிழக்கு மாவட் டத்திற்கு உட்பட்ட நகர, ஒன்றிய, பேரூர் உள்ளிட்ட இடங்களில் பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்களில் திமுகவினர் நீர்மோர் பந்தல் அமைத்து உதவிட வேண்டும்.நீர்மோர் பந்தல் களில் பொது மக்களுக்கு வழங்குவதற்காக இளநீர், தர் பூசணி, முலாம்பழம், நுங்கு, வெள்ளரிக்காய் பிஞ்சுகள் மற்றும் சுத்திகரிக்கபட்ட குடிநீர் ஆகியவற்றை போது மான அளவிற்கு கையிருப்பு வைத்திருக்க வேண்டும்.
தண்ணீர் பந்தல் களை உடனடியாக தர்மபுரி கிழக்கு மாவட்டம் நகர, ஒன்றிய, பேரூர் வார்டு கிளை நிர்வாகிகள் அணிகளின், அமைபாளர்கள், துணை அமைப்பாளர்கள் உள்ளாட்சி பிரதிநிதிகள், திமுகவினர் அனைவரும் அவரவர் பகுதிகளில் அமைத்து மக்களின் தாகத்திற்கு உடனடியாக செயல் பட வேண்டும். மேலும் நீர் மோர் பந்தல்களை காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை பொதுமக்கள் தாகம் தீர செயல்பட வேண்டும். கோடை காலம் முடிவு வரை நீர்மோர் பந்தல்களை தொடர்ந்து செயல்பட வேண்டும். இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.