திருக்கோவிலூர் நகராட்சி அலுவலகத்தில் குடியரசு தின விழா
திருக்கோவிலூர் நகராட்சி அலுவலகத்தில் நடந்த குடியரசு தின விழாவில் கவுன்சிலர்கள், நகராட்சி ஊழியர்கள் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.;
Update: 2024-01-26 07:27 GMT
உறுதிமொழி ஏற்பு
திருக்கோவிலூர் நகராட்சி அலுவலகத்தில் 75 ஆவது குடியரசு தினத்தை முன்னிட்டு நகர மன்ற தலைவர் முருகன் தலைமையில் தேசியக்கொடி ஏற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த விழாவிற்கு நகராட்சி ஆணையாளர் கீதா முன்னிலை வகித்தார். நகராட்சி துணை தலைவர் உமா மகேஸ்வரி குணா வரவேற்றார். விழாவில் தேசியக்கொடி ஏற்றப்பட்டு நகர மன்ற கவுன்சிலர்கள் மற்றும் நகராட்சி ஊழியர்கள் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.