அரசு அலுவலகங்களில் களைகட்டிய குடியரசு தினவிழா
அரியலூர் அரசு அலுவலகங்களில் குடியரசு தினவிழா விமரிசையாக கொண்டாடப்பட்டது.;
Update: 2024-01-27 01:22 GMT
அரசு அலுவலகங்களில் களைகட்டிய குடியரசு தினவிழா
இந்திய திருநாட்டின் குடியரசு தினம் ஜனவரி 26 ஆம் தேதி கொண்டாடபட்டது. இதனையொட்டி அரியலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றியக்குழு தலைவர் செந்தமிழ்செல்வி தலைமையில் தேசியக்கொடி ஏற்றிவைத்து மரியாதை செலுத்தபட்டது.
பின்னர் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு இனிப்புகள் வழங்கபட்டது. இந்த நிகழ்ச்சியில் ஒன்றியக்குழு துணை தலைவர் சரஸ்வதிஜெயவேல் மற்றும் ஒன்றிய கவுன்சிலர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். இதேபோல் அரியலூர் நகராட்சி அலுவலகம் உள்ளிட்ட மாவட்டத்தில் உள்ள பல்வேறு அரசு அலுவலகங்களில் குடியரசு தினவிழா கொண்டாடபட்டது குறிப்பிடதக்கது.