முன்னாள் ராணுவ வீரர்கள் சார்பில் குடியரசு தின விழா

குடியரசு தின விழாவையொட்டி திருக்கோவிலூரில் மகாத்மா காந்தி சிலைக்கு முன்னாள் ராணுவ வீரர்கள் சார்பில் வீரவணக்கம் செலுத்தப்பட்டது .

Update: 2024-01-26 05:15 GMT

மகாத்மா காந்திக்கு மரியாதை 

இன்று 75 ஆவது குடியரசு தினத்தை முன்னிட்டு திருக்கோவிலூர் 5 மணி சந்திப்பில் நிறுவப்பட்டுள்ள மகாத்மா காந்தி சிலைக்கு முன்னாள் ராணுவ வீரர்கள் சார்பில் வீரவணக்கம் செலுத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக திருக்கோவிலூர் நகர மன்ற தலைவர் டி.என்.முருகன் கலந்துகொண்டு மகாத்மா காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
Tags:    

Similar News