குமரி நெடுஞ்சாலையை செப்பனிட சிறப்பு நிதியாக 21 கோடி ஒதுக்க கோரிக்கை

குமரி நெடுஞ்சாலையை செப்பனிட சிறப்பு நிதியாக 21 கோடி ஒதுக்க எம்.பி கோரிக்கை வைத்துள்ளார்.

Update: 2024-07-04 12:50 GMT

அமைச்சரிடம் மனு

 கன்னியாகுமரி மாவட்டத்தில் 4 வழி சாலைக்கான பணிகள் நடைபெற்று வருகிறது. அது மக்கள் பயன்பாட்டிற்கு வரும் வரையில் தற்பொழுதுள்ள தேசிய நெடுஞ்சாலை போக்குவரத்திற்கு பயன்பட்டு வருகிறது. பொது மக்கள் இந்த சாலையில் பயணிக்க மிகவும் சிரமப்படுகின்றனர். சமீபத்தில் பெய்த கடும் மழை காரணமாக சாலை முற்றிலும் பழுதடைந்து காணப்படுகிறது.

இதன் காரணமாக விபத்துக்கள் மற்றும் உயிரிழப்பு  அதிகரித்துள்ளது.      அது போன்று மார்த்தாண்டம், பார்வதிபுரம் மேம்பாலங்கள் பராமரிப்பின்றி காணப்படுகின்றது. சமீபத்தில் மார்த்தாண்டம் மேம்பாலத்தில் ஏற்பட்ட பள்ளம் இதற்கு அத்தாட்சி. ஆகவே இந்த இரண்டு பாலங்களும் பராமரிக்கப்பட வேண்டும். 

இந்த மேம்பாலங்கள் உள்பட களியக்காவிளை, படந்தாலுமூடு, குழித்துறை, மார்த்தாண்டம் மேம்பாலத்தின் கீழ்பகுதி, மணலி, குமாரபுரம், இடலாக்குடி, சுசீந்திரம் ஆகிய பகுதிகள் மிகவும் பழுதடைந்துள்ளது. இந்த இடங்களில் சாலைகளை புதுப்பிக்கவும், செப்பனிடவும் 21 கோடி ரூபாய் செலவாகும் என்பதை தேசிய நெடுஞ்சாலை துறை தெரிவித்துள்ளது. 

ஆகவே பயணிகளின் நலனை கருத்தில் கொண்டும், விபத்துகள் ஏற்படுவதை தவிர்க்கவும் இந்த பணிகளுக்கு 21 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்ய வேண்டும் என கேட்டு கொண்டார்

Tags:    

Similar News