லாரிகளுக்கு ஆற்றுப்படுகையில் நேரடியாக மணல் வழங்க கோரிக்கை

லாரிகளுக்கு ஆற்றுப்படுகையில் நேரடியாக மணல் வழங்க வேண்டும் என திருச்சி பொதுப்பணித்துறை அலுவலகத்தில் சேலம் மாவட்ட லாரி உரிமையாளர் சங்கம் சார்பில் மனு அளித்தனர்.

Update: 2023-12-14 15:44 GMT

கோரிக்கை வைத்தவர்கள்

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

திருச்சி சுப்பிரமணியபுரம் பகுதியில் உள்ள தமிழ்நாடு அரசு பொதுப்பணித்துறை மற்றும் நீர்வள ஆதாரத்துறை அலுவலகத்தில் சேலம் மாவட்டம் லாரி உரிமையாளர் சங்கத்தினர் 50-க்கும் மேற்பட்டோர் இன்று கோரிக்கை மனு அழித்தனர். அதில்.. கடந்த செப்டம்பர் அனைத்து மணல் குவாரிகளிலும் E.D ரைடு நடத்தப்பட்டது.

இதனைத் தொடர்ந்து அரசே நேரடியாக முன்பதிவு செய்த வாகனத்திற்கு மணல் வழங்கப்படும் என அறிவித்து தற்போது வழங்கி வருகிறது. ஆனால் ஒரு மணல் குவாரிகளில் ஐம்பதிலிருந்து நூறு வாகனங்கள் மட்டுமே மணல் எடுக்க அனுமதிக்கப்படுவதால் பொதுமக்களும் லாரி உரிமையாளர்களும் அதிகமாக பாதிக்கப்பட்டு உள்ளனர். தற்போது மணல் ஒரு யூனிட் 2,650 ரூபாய்க்கு கொடுக்கப்படுகிறது. ஆனால் ஆற்று படுக்கையில் நேரடியாக எடுத்தால் 1000 ரூபாய்க்கு மட்டுமே அரசு மணல் வழங்குகிறது, இதில் தனியார் மற்றும் கார்ப்பரேட் நிறுவனங்களே பயன் அடைகின்றனர். எனவே ஆற்று படுகையில் நேரடியாக மணல் வழங்க கோரி மனு அளித்தனர். மேலும் தமிழ்நாடு முதலமைச்சர் சிறப்பு கவனம் செலுத்தி லாரி உரிமையாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும் என கேட்டுக்கொண்டனர்.

Tags:    

Similar News