ஆரல்வாய்மொழி ரயில்வே மேம்பாலம் பணி உடனடியாக முடிக்க கோரிக்கை 

ஆரல்வாய்மொழி ரயில்வே மேம்பாலம் பணி உடனடியாக முடிக்க முன்னாள் அமைச்சர் கோரிக்கை விடுத்துள்ளார்.

Update: 2024-06-08 09:55 GMT

ஆரல்வாய்மொழி ரயில்வே மேம்பாலம் பணி உடனடியாக முடிக்க முன்னாள் அமைச்சர் கோரிக்கை விடுத்துள்ளார்.


கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி - குமாரபுரம் இணைப்புச் சாலையின் குறுக்கே செல்கின்ற சுபாஷ் நகர் ரயில்வே மேம்பாலம் கடந்த 2019-ல் இடிக்கப்பட்டது. இந்த பாலம் தொடர்ந்து  பல ஆண்டு காலமாக வேலை நடைபெறாமல் இருந்தது.  சூழ்நிலையில் அதிமுக முன்னாள் அமைச்சர் தளவாய்சுந்தரம் எம் எல் எ  தலைமையில் பாலத்தை உடனடி சீரமைக்க கேட்டு ஆரல்வாய்மொழி சந்திப்பில் பொதுமக்கள் முன்னிலையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.      

இதையடுத்து தற்போது சுபாஷ் நகர் ரயில்வே மேம்பாலம் பணி  நடைபெற்று வருகிறது. அப்பணியினை தளவாய்சுந்தரம் எம் எல் ஏ நேரில் சென்று நேற்று  பார்வையிட்டார். உடன் ஆரல்வாய்மொழி பேரூராட்சி தலைவரும்  தோவாளை தெற்கு ஒன்றிய அதிமுக செயலாளருமான முத்துக்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர். இந்த பாலம் பணி கடந்த 5 ஆண்டுகளாக தாமதமாகி வருவதால் சுற்றுவட்டார பகுதி மக்கள் பாதிப்படைந்துள்ளதால் உடனடி பணிகளை முடிக்க அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்தார்.

Tags:    

Similar News