தலைஞாயிறு கூட்டுறவு சர்க்கரை ஆலையை இயக்க கோரிக்கை
தலைஞாயிறு கூட்டுறவு சர்க்கரை ஆலையை மீண்டும் இயக்க வேண்டும் என தமிழ்நாடு உழவர் பேரியக்க நிர்வாகிகள் கலந்தாய்வுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தமிழ்நாடு உழவர் பேரியக்க மயிலாடுதுறை மாவட்ட நிர்வாகிகள் கலந்தாய்வு கூட்டம் மயிலாடுதுறையில் நடைபெற்றது. உழவர் பேரியக்க மாவட்ட தலைவர் மனோகரன் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் தமிழ்நாடு உழவர் பேரியக்க மாநில தலைவர் ஆலயமணி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்.
இந்த கூட்டத்தில், கிராமங்கள் தோறும் தமிழ்நாடு உழவர் பேரியக்கத்திற்கு உறுப்பினர்களை சேர்ப்பது, வேளாண் பிரச்சனைகளை கையில் எடுத்து மயிலாடுதுறை மாவட்டத்தின் எல்லா இடங்களிலும் போராட்டம் நடத்துவது, இயங்காமல் உள்ள தலைஞாயிறு கூட்டுறவு சர்க்கரை ஆலையை உடனடியாக இயக்குவதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், மயிலாடுதுறை மாவட்டத்தில் இருக்கக்கூடிய நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகள் கொண்டு வருகின்ற நெல்லை பாதுகாப்பாக வைப்பதற்கான அரங்கத்தை அரசு ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்.
இதே போல, நேரடி கொள்முதல் நிலையங்களில் மாமூல் என்ற விவசாயிகளிடம் வசூல் செய்வதை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும், மயிலாடுதுறை மாவட்டத்தில் இருக்கக்கூடிய அனைத்து ஒழுங்குமுறை விற்பனை கூடங்களிலும் விவசாயிகள் கொண்டு வருகின்ற பொருட்களுக்கு வியாபாரிகளும், அதிகாரிகளும் சண்டிகேட் அமைத்துக் கொண்டு விவசாயிகளை நசுக்கி கொண்டிருக்கின்றார்கள். மயிலாடுதுறை மாவட்டத்தில் இருக்கக்கூடிய அனைத்து ஒழுங்குமுறை விற்பனை கூடங்களிலும் விவசாயிகள் கொண்டு வருகின்ற அந்த பொருளுக்கு வியாபாரிகளும் அதிகாரிகளும் ஒப்பந்தம் செய்து கொண்டு விவசாயிகளை நசுக்கி வரும் செயலை தடுத்த நிறுத்த வேண்டும்.
பல இடங்களில் ஒழுங்குமுறை விற்பனை கூடங்களுக்கு சரியான அதிகாரிகள் இல்லை. காலி பணியிடங்கள் நிறை உள்ளன. அவற்றை உடனடியாக நிரப்ப வேண்டும், கட்டிட வசதிகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை அரசு செய்து கொடுத்து விவசாயிகளின் வாழ்வாதாரத்தைக் காக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில், மாவட்ட செயலாளர் லண்டன் அன்பழகன், மாவட்ட தலைவர் பழனிசாமி, தஞ்சை மண்டல பொறுப்பாளர் அய்யப்பன், நகர செயலாளர்கள் ராஜ்குமார், விஜயகுமார் உள்ளிட்ட மாவட்ட, நகர, ஒன்றிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.