ஒரத்தநாட்டில், கூலி நிலுவை கேட்டு குவிந்த ஆயிரக்கணக்கான பெண்கள் 

Update: 2023-11-03 13:13 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு ஒன்றியத்தில், 100 நாள் வேலைத்திட்ட தொழிலாளர்களுக்கு கடந்த மூன்று மாத காலமாக சம்பளம் வழங்கப்படாமல் உள்ளது. தீபாவளி பண்டிகையை கொண்டாடும் விதமாக அனைவருக்கும் உடனடியாக சம்பள நிலுவைத் தொகையை வழங்க வேண்டும்.  ஜாப் கார்டு வைத்துள்ள அனைவருக்கும் வேலை வழங்க வேண்டும்.

100 நாள் வேலையே 200 நாட்களாக உயர்த்தி, கூலியை ரூ.600 ஆக அதிகரித்து வழங்க வேண்டும் என வலியுறுத்தியும், ஒன்றிய மோடி அரசு 100 நாள் வேலை திட்டத்திற்கான நிதியை குறைத்து திட்டத்தை சீர்குலைப்பதை கண்டித்தும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில், பேருந்து நிலையத்தில் இருந்து, ஆயிரக்கணக்கான பெண்கள் சுமார் 1 கி.மீ தூரம் ஊர்வலமாகச் சென்று, ஒரத்தநாடு ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

ஆர்ப்பாட்டத்திற்கு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றிய செயலாளர் எஸ் கோவிந்தராஜ் தலைமை வகித்தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் குழு உறுப்பினர் உ.வாசுகி, மாவட்டச் செயலாளர் சின்னை.பாண்டியன், மாவட்டச் செயற்குழு உறுப்பினர் என்.சுரேஷ்குமார், மாவட்டக் குழு உறுப்பினர் ஆம்பல் துரை.ஏசு ராஜா ஆகியோர் கண்டன உரையாற்றினர்.  இதில், ஒன்றியக் குழு உறுப்பினர்கள் மோகன் தாஸ், ஜெய்சங்கர், ரமேஷ், மலர்கொடி, சரவணன், வசந்தகுமார், அரங்கசாமி, சிவபுண்ணியம், வெங்கடேஷ் மற்றும் ஆயிரக்கணக்கான 100 நாள் வேலைத் திட்ட தொழிலாளர்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து வட்டார வளர்ச்சி அலுவலர்களை சந்தித்து கோரிக்கைகளை வலியுறுத்தி மனு அளிக்கப்பட்டது.

Tags:    

Similar News