பாபநாசம் பகுதியில் மழைநீர் வடிகால் பணிகளை விரைந்து முடிக்க கோரிக்கை
பாபநாசம் பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் மழைநீர் வடிகால் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தஞ்சாவூர் கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலை பல ஆண்டுகளுக்கு பின்னர் தற்போது தமிழ்நாடு அரசின் நேரடி கண்காணிப்பின் கீழ் ரூ 79.42 கோடி மதிப்பீட்டில் புதிய சாலை அமைக்கும் பணி நடைபெற்றது.
இந்த பணிகள் தஞ்சாவூர் பள்ளிஅக்ரஹாரத்தில் தொடங்கி கும்பகோணம் நோக்கி ஒரு பிரிவாகவும் திருவலஞ்சுழியில் தொடங்கி தஞ்சாவூர் நோக்கி ஒரு பிரிவாகவும் பணிகள் நடைபெற்றது மேலும் தஞ்சாவூர் கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையில் பாபநாசம் பகுதியில் பசுபதி கோவில் அய்யம்பேட்டை சக்கரா பள்ளி வழுத்தூர் சரபோஜி ராஜபுரம் ரெகுநாதபுரம் பண்டாரவாடை ராஜகிரி பாபநாசம் திருப்பாலைத்துறை,
சுவாமிமலை ஆகிய 11 இடங்களில் மழை நீர் வடிகால் வசதிக்காக பணிகள் நடைபெற்றது .இதில் பாபநாசம் திருப்பாலைத்துறை உள்பட பல்வேறு இடங்களில் அமைக்கப்பட்ட மழை நீர் வடிகால் பணி ஆங்காங்கே முற்று பெறாமல் பணிகள் உள்ளது தேசிய நெடுஞ்சாலை பகுதியில் சாலையின் இரு புறங்களிலும் ஆங்காங்கே நிறுத்தப்பட்டுள்ளது.
பாபநாசம் பகுதியில் சாலைகள் குறுகியதாக இருப்பதால் பணிகள் முடிக்கப்படாமல் உள்ள குழிக்குள் இரு சக்கர வாகனத்தில் செல்வோர் மற்றும் பொதுமக்கள் தவறி விழுந்து ஆபத்து ஏற்படும் சூழ்நிலை உள்ளது எனவே மழை நீர் வடிகால் அமைக்கும் பணியினை முழுமையாக அமைத்து தரவேண்டும் என தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளுக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.