உருமு தனலட்சுமி கல்லூரி மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்க கோரிக்கை

காட்டூர் உருமு தனலட்சுமி கல்லூரியில் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை தடையின்றி அரசு வழங்குவதை உறுதி செய்ய கோரி இந்திய மாணவர் சங்கத்தின் கிளை மாநாடு நடைபெற்றது.

Update: 2024-02-21 11:46 GMT
 உருமு தனலட்சுமி கல்லூரியில் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை தடையின்றி அரசு வழங்குவதை உறுதி செய்ய கோரி இந்திய மாணவர் சங்கத்தின் கிளை மாநாடு நடைபெற்றது.



திருச்சி மாநகர் மாவட்டம் காட்டூர் உருமு தனலட்சுமி கல்லூரியில் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை தடையின்றி அரசு வழங்குவதை உறுதி செய்ய கோரி இந்திய மாணவர் சங்கத்தின் கிளை மாநாடு நடைபெற்றது.மாநாட்டில் கல்லூரியில் இருக்க கூடிய அடிப்படை பிரச்சனை கல்லூரி மாணவர்கள் கல்லூரிக்கு எளிதில் வந்து செல்ல கல்லூரி நேரங்களில் கூடுதலாக அரசு பேருந்துகள் இயக்க வேண்டும்.

மாணவர்கள் கல்லூரிக்கு செல்வதற்கு தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலையை கடந்து செல்ல மிகவும் சிரமப்பட்டு வருகின்றார்கள். எனவே கல்லூரிக்கு முன்பு வாகனம் நிறுத்தம் சிக்னல் வசதி ஏற்படுத்தித் தர வேண்டும். மாநாட்டில் தீர்மானமாக நிறைவேற்றப்பட்டது.இதைத் தொடர்ந்து இந்திய மாணவர் சங்கத்தின் காட்டூர் உருமு தனலட்சுமி கல்லூரியின் புதிய கிளை நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

இதில் கிளை தலைவராக தோழர். ஸ்ரீநாத் கிளை செயலாளர் தோழர் ஹரி கிளை துணைத் தலைவர் கண்ணா சித்க் யோகேஷ் கிளை துணைச் செயலாளராக அஜய் விஷ்வா அமரன் மற்றும் கிளை செயற்குழு உறுப்பினராக பாலா ஹரி தனுஷ் சகாபுதீன் அறிவாளன் வல்லரசு தினேஷ் சேவியர் அரவிந்த் ஜெகா விஷ்வா ஆகியோர்கள் கல்லூரியின் கிளை நிர்வாகியாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

Tags:    

Similar News