கல்வி நிலையங்களில் உள்ள சமுதாயப் பெயர்களை நீக்க கோரிக்கை
கல்வி நிலையங்களில் உள்ள சமுதாயப் பெயர்களை நீக்க வேண்டும் என பிற்படுத்தப்பட்டோர் சமுதாயத்தின் உரிமைக்கான கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.
கல்வி நிலையங்களில் உள்ள சமுதாயப் பெயர்களை நீக்க வேண்டும் பிற்படுத்தப்பட்டோர் சமுதாயத்தின் உரிமைக்கான கூட்டமைப்பு கோரிக்கை பிற்படுத்தப்பட்டோர் சமுதாயத்தின் உரிமைக்கான கூட்டமைப்பின் அதன் தலைவர் ரத்தின்சபாபதி செய்தியாளர்களும் கூறும்போது நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் உத்தர்ப் பிரதேசம் மராட்டியம் ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் ஒ.பி.சி சமுதாயத்தினர் விழிப்புணர்வு பெற்று தங்களின் நிலைமையைப். புரிந்து தங்களை புறக்கணித்த மத்தியில் ஆட்சி புரிந்த பாஜக கட்சிக்கு அதிர்ச்சி தந்துள்ளனர் .
மேலும் ஜாதி வாரியாக கணக்கெடுப்பை நடத்தி அந்த கணக்கெடுப்பின் அடிப்படையில் ஓபிசி சமுதாயத்தினருக்கான இட ஒதுக்கீட்டை உயர்த்திய பிஹார் மாநிலம் முதல்வர் நிதிஷ்குமார் அவர்களுக்கு அங்கீகாரம் தந்த அவர் பங்களிப்பின்றி மத்திய அரசு பயணிக்க முடியாது என்ற நிலைமையை ஏற்படுத்தியுள்ளர் ஒய்வு பெற்ற நீதிபதி சந்துரு கல்வி நிலையங்களில் ஜாதி சமய அடிப்படையில் ஏற்படும் வன்முறைகளைகளைய கொடுத்த பல சிபாரிசுகள் அபத்த மானைவயாக உள்ளது என்பதை தமிழக அரசுக்கு சுட்டிக்காட்ட உள்ளோம்.
மேலும் கல்வி நிலையங்களில் உள்ள சமுதாயப் பெயர்கள் நீக்கப்பட வேண்டும் கள்ளர் சீரமைப்பு பள்ளிகள் மற்றும் ஆதிதிராவிட நலப் பள்ளிகள் ஆகியவற்றின் பெயர்களை நீக்கி அரசு பள்ளிகள் என்ற பெயரில் இயங்கவேண்டும் தமிழக அரசு கல்வி நிலையங்களில் சமூக நீதி மாணவர் படை என்ற அமைப்பை உருவாக்க வேண்டும் தமிழ்நாட்டில் நேர்மையான முறையில் ஜாதி வாரி கணக்கெடுப்பு உடனே நடத்தி அந்த தரவுகள் அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்க வேண்டும் மத்திய பணிகள் மற்றும் கல்வி நிலையங்களில் கொடுக்கப்பட்ட இட ஒதுக்கீட்டில் நிரப்பப்படாத 9.சதவீத பணிகள் சுமார் 2.50 லட்சம் அரசு பணிகளில் ஒ.பி.சி சமுதாயத்தினரை அமர்த்திட வேண்டும் வன்கொடுமை தடுப்பு சட்டத்தை துஷ்பிரயோகம் செய்தால் மற்றும் சமுதாய கலாச்சார அடையாளங்களை பறிக்கும் நடவடிக்கையில் உடனடியாக நிறுத்த வேண்டும் இவ்வாறு அவர் கூறினார்