போக்குவரத்துக்கு இடையூராக உள்ள புளியமரத்தை அகற்றக் கோரிக்கை!

நாட்றம்பள்ளி அடுத்த மேல்மாமுடிமானப்பள்ளி பகுதியில் சாலையின் நடுவே போக்குவரத்துக்கு இடையூராக உள்ள புளியமரத்தை அகற்றக்கோரி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2024-06-11 07:50 GMT

நாட்றம்பள்ளி அடுத்த மேல்மாமுடிமானப்பள்ளி பகுதியில் சாலையின் நடுவே போக்குவரத்துக்கு இடையூராக உள்ள புளியமரத்தை அகற்றக்கோரி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த மேல்மாமுடிமானப்பள்ளி பகுதியில் சாலையின் நடுவே போக்குவரத்துக்கு இடையூராக உள்ள புளியமரத்தை அகற்றக்கோரி பொதுமக்கள் கோரிக்கை! திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த பச்சூர் ஊராட்சிக்கு உட்பட்ட மேல்மாமுடி பள்ளி அருகில் போக்குவரத்து இடைஞ்சலாக ஒரு புளிய மரம் உள்ளது உயிர்பலி வாங்க காத்திருக்கும்அந்த புளிய மரத்தை அகற்ற கோரி துறை சேர்ந்த அதிகாரிகளுக்கு பலமுறை அப்பகுதி மக்கள் மனுக்கொடுத்தும் மனு மீது எந்தெந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கோரிக்கை வைத்துள்ளனர்.

அப்பகுதி மக்கள் கூறுகையில் இந்த பகுதியில் சாலையின் நடுவே புளிய மரம் உள்ளது அந்த புளிய மரத்தை அகற்றாமல் ஒப்பந்ததாரர் தார் சாலை அமைத்துள்ளனர் இந்த சாலையில் போக்குவரத்து பாதிப்பு உள்ளாகி எந்த நேரத்திலும் உயிர் சேதம் ஏற்படும் நிலையில் உள்ளது சமீபத்தில் அப்பகுதியில் ஆம்புலன்ஸ் வாகனம் கூட செல்ல முடியாத அளவில் சாலை உள்ளது உடனடியாக துறை சார்ந்த அரசுஅதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு பொதுமக்கள் நலன் கருதிபுளிய மரத்தை அகற்ற வேண்டும் என்று அப்பகுதி மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை முன்வைக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது

Tags:    

Similar News