சென்னைக்கு பஸ் இயக்க கோரிக்கை!
சென்னைக்கு பஸ் விட பாஜக ஒன்றிய செயலாளர் கணேசன் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
By : King 24x7 Angel
Update: 2024-02-26 05:00 GMT
திருமயம் அரிமளம் ஒன்றியம் கே புதுப்பட்டியில் இருந்து அரிமளம், திருமயம் புதுக்கோட்டை வழியாக சென்னைக்கு பஸ் விட பாஜக ஒன்றிய செயலாளர் கணேசன் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் கலெக்டருக்கு அனுப்பிய மனுவில் புதுகை மாவட்ட எல்லையில் அமைந்துள்ள கே புதுப்பட்டி ஒரு பிர்க்கா தலைமையிடம் இதனை சுற்றி 108 கிராமங்கள் உள்ளன. இப்பகுதி மக்கள் சென்னை போக அரிமளம், புதுகை, காரைக்குடி, அறந்தாங்கி செல்ல வேண்டி உள்ளது. இதற்கு அதிக செலவாகிறது. பயண நேரமும் அதிகமாகிறது பெண்கள் முதியோர் மிகவும் சிரமப்படுகின்றன. எனவே அரசு அரிமளத்தில் இருந்து புறப்படும் பஸ்சை கே புதுப்பட்டி வரை நீட்டிக்க வேண்டும் இதன் மூலம் 108 கிராம மக்கள் பஸ் வசதி பெறுவதுடன் கூடுதல் வருவாயும் கிடைக்கும் இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.