ஆதார் இ - சேவை மையம் அமைக்க கோரிக்கை
பொன்னமராவதி அருகே உள்ள காரையூர் பகுதியில் அரசின் ஆதார் சேவை மையம் அமைக்க பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
Update: 2024-04-21 06:31 GMT
பொன்னமராவதி வடக்கு ஒன்றியப் பகுதியான காரையூரைச் சுற்றிலும் ஏராளமான கிராமங்கள் உள்ளன. இப்பகுதி பொதுமக்கள் ஆதார் திருத்தம், பெயர் சேர்த்தல் உள்ளிட்ட அரசின் பல்வேறு ஆதார் சேவைகளைப் பெற சுமார் 20 கிலோ மீட்டர் தொலைவுள்ளபொன்னமராவதி வட்டாட்சியர் அலுவலகம் மற்றும் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் வர வேண்டியுள்ளது. இதனால் கால, பண விரையங்கள் ஏற்படுகின்றன. எனவே காரையூர் மற்றும் சுற்றுக்கிராம மக்கள் பயன்பெறும் வகையில் காரையூர் பகுதியில் அரசின் ஆதார் சேவை மையம் அமைக்க பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.