குமாரபாளையத்தில் ரத்த வங்கி அமைக்க கோரிக்கை

குமாரபாளையத்தில் ரத்த வங்கி அமைக்க வேண்டும் என மக்கள் நீதி மய்யம் சார்பில் மாவட்ட கலெக்டருக்கு கோரிக்கை மனு அனுப்பப்பட்டுள்ளது.

Update: 2024-04-05 11:28 GMT

குமாரபாளையத்தில் ரத்த வங்கி அமைக்க வேண்டும் என மக்கள் நீதி மய்யம் சார்பில் மாவட்ட கலெக்டருக்கு கோரிக்கை மனு அனுப்பப்பட்டுள்ளது.


நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அரசு மருத்துவமனையில் தினந்தோறும் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் சிகிச்சைக்காக வருகின்றார்கள். மருத்துவமனையில் உள்நோயாளிகள், கர்ப்பிணி பெண்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவசர சிகிச்சை பெறுபவர்களுக்கு இரத்தம் தேவை ஏற்பட்டால். திருச்செங்கோடு அரசு மருத்துவமனையில் உள்ள இரத்த வங்கியை நாட வேண்டியுள்ளது. மேலும் இங்கு உள்ள நோயாளிக்கு ரத்தம் கொடுக்க பொதுமக்கள் யாராவது முன்வந்தால், திருச்செங்கோடு சென்று ரத்தம் வழங்க வேண்டியுள்ளது. இதனால், ரத்த தானம் செய்ய முன்வருபவர்களும், ரத்த தானம் செய்ய அவ்வளவு தூரம் செல்ல தயாராக இல்லை. மேலும், திருச்செங்கோடு செல்ல போதுமான பஸ் வசதியும் இல்லை. ரத்த தானம் செய்ய முன்வருபவர்கள் கூட தூரத்தை எண்ணியும், கால விரயம், பொருள் விரயம் ஆகியவற்றை எண்ணி, ரத்ததானம் வழங்க முன்வர தயங்குகிறார்கள். இதனால் எண்ணற்ற நோயாளிகள் உயிர் பிழைக்க முடியாத நிலை ஏறபட்டு வருகிறது. 2016ல் தாலுக்கா அந்தஸ்து பெற்றும், இதுவரை குமாரபாளையம் தாலுக்கா அந்தஸ்துக்கு ஏற்ற மருத்துவமனையாக இல்லாமல் உள்ளது.

குமாரபாளையத்தில் ரத்த வங்கி அமைத்தால் ரத்த தானம் செய்ய பலரும் முன்வருவார்கள். குமாரபாளையத்தில் எண்ணற்ற லயன்ஸ் சங்கங்கள், ரோட்டரி, அபெக்ஸ் போன்ற சேவை சங்கங்கள் மூலம் ரத்த தான முகாம்கள் நடத்தப்படுகின்றன. இந்த முகாம்களில் ஈரோடு அல்லது சேலம் போன்ற ஊர்களில் இருந்துதான், ரத்த வங்கிகள் வந்து ரத்த வகைகளை சேகரித்து செல்கிறார்கள். இங்கு கொடுக்கப்படும் ரத்ததானம், இங்கு உள்ளவர்களுக்கு கிடைக்க வாய்ப்பில்லாமல் போகிறது. இதனை கருத்தில்கொண்டு, குமாரபாளையத்தில் ரத்தம் இல்லாமல் ஒரு உயிர் கூட போகக் கூடாது என்று எண்ணி, இங்கு ரத்த வங்கி அமைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Tags:    

Similar News