பஞ்சாயத்து தலைவர் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை

முத்துக்காப்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதியை சேர்ந்த ஊர் பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு வழங்கினர்.

Update: 2024-06-25 13:23 GMT

முத்துக்காப்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதியை சேர்ந்த ஊர் பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு வழங்கினர்.


நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் அடுத்துள்ள முத்துக்காப்பட்டி மேதரா மாதேவி பகுதியை சேர்ந்த பொதுமக்கள் நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு ஒன்று வழங்கினர். அதில் கூறியுள்ளதாவது சேந்தமங்கலம் அடுத்துள்ள முத்துக்காப்பட்டி மேதரமாதேவியில் கிராம பொது மக்களுக்கு 1972 ஆம் வருடம் இலவச வீட்டு மனை பட்டா வழங்கப்பட்டு அதில் பொதுமக்கள் வீடு கட்டி குடியிருந்து வருகின்றனர்..

இந்நிலையில் முத்துக்காப்பட்டி பஞ்சாயத்து தலைவர் அருள் ராஜேஷ் என்பவர் ஊரில் உள்ள பாழடைந்த கிணற்றை மூடியதில், தங்கமண் துகள் இருப்பதை அறிந்து, அதை கள்ளத்தனமாக திருட முயற்சி செய்தார் . இதை அப்பகுதி பொதுமக்கள் தடுத்து நிறுத்தியதால், ஆத்திரம் கொண்ட பஞ்சாயத்து தலைவர் பலி வாங்கும் நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறார் . மேலும் தங்க மண்ணை அள்ள தடுத்தவர்களின் வீடுகளையும், தனக்கு எதிராக பேசி வரும் நபர்களின் வீடுகளையும் சாலை விரிவாக்கம் என்ற பெயரில் வீடுகளை இடித்து தள்ளுவோம் என தனது அடியாட்களை கொண்டு மிரட்டி வருகிறார் ..

மேலும் சாலை விரிவாக்கம் செய்யப்படுவதாக கூறி,அதன் காரணமாக உங்களுக்கு இலவசமாக வழங்கப்பட்ட பட்டா நிலத்தில் சாலை விரிவாக்க பணிகள் நடைபெறும் என எங்களை பழிவாங்கும் போக்கோடு பஞ்சாயத்து தலைவர் செயல்பட்டு வருகிறார். இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது....

Tags:    

Similar News