இரும்பாடி ஊராட்சியில் சுகாதார கேட்டை தடுக்க மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை

சோழவந்தான், இரும்பாடி ஊராட்சியில் கழிவு நீரால் ஏற்படும் சுகாதார கேட்டை தடுக்க மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை வைத்துள்ளனர்.

Update: 2024-06-16 13:31 GMT

சாலையில் ஒடும் கழிவுநீர்

மதுரை மாவட்டம், வாடிப்பட்டி தாலுகா, இரும்பாடி ஊராட்சிக்கு உட்பட்ட பால கிருஷ்ணாபுரம். பெரியார் நகரில் தெருக்களில் ஆறாக ஓடும் கழிவு நீரால் தொற்று நோய் பரவக்கூடிய அபாயம் இருப்பதாகவும், இக் கழிவு நீரால், அப்பகுதியில் குடியிருக்கும் பொதுமக்கள் கொசுக்களாலும்,

மலேரியா டெங்கு போன்ற தொற்று நோய்களாலும் மிகவும் பாதிப்படைந்து வருவதாகவும், இதுகுறித்து சம்பந்தப்பட்ட இரும்பாடி ஊராட்சி நிர்வாகத்திடம் அப்பகுதியில் வாழும் பொதுமக்கள் கழிவுநீர் வாய்க்கால் சீரமைத்து தருமாறு பலமுறை கோரிக்கை வைத்தும், சம்பந்தப்பட்ட ஊராட்சி நிர்வாகிகள் செவி சாய்க்காமல் இருந்து வருகின்றனர்.

எனவும், இதனால் சம்பந்தப்பட்ட இரும்பாடி ஊராட்சிக்கு இக்கழிவு நீர் கால்வாயை சீர்மைத்து தர உத்தரவிட வேண்டுமென்று, மாவட்ட ஆட்சித் தலைவருக்கு பொதுமக்கள் சார்பில் கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags:    

Similar News