வரதாபுரம் சாலையை விரிவுபடுத்த கோரிக்கை

சிறுவாக்கம் - சாமந்திபுரம் சாலையை விரிவுபடுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை

Update: 2024-06-15 06:05 GMT

வரதாபுரம் சாலை

காஞ்சிபுரம் அடுத்த, சிறுவாக்கம் - வரதாபுரம் - சாமந்திபுரம் கிராமத்திற்கு செல்லும் சாலை உள்ளது. இந்த சாலை வழியாக, சென்னை - பெங்களூரு அதிவிரைவு சாலைக்கு, டிப்பர் லாரிகளில் சவுடு மண் எடுத்து செல்லப்படுகிறது. இந்த பணிக்கு, நுாற்றுக்கணக்கான டிப்பர் லாரிகள் தினசரி சென்று வருகின்றன. அதே சாலை வழியாக, குக்கிராமங்களுக்கு செல்லும் சிறிய அளவிலான பேருந்து, செல்ல முடியாத சூழல் ஏற்பட்டு உள்ளது. குறிப்பாக, டிப்பர் லாரி செல்லும் போது, எதிர் திசையில் சிறிய பேருந்து சென்று விட்டால், இரு வாகனங்களும் ஒதுங்க முடியாத சூழல் உருவாகி உள்ளன. வாலாஜாபாத் வட்டார வளர்ச்சி அலுவலர் ஒருவர் கூறுகையில், சிறுவாக்கம் - சாமந்திபுரம் சாலையை விரிவுபடுத்த ஊரக வளர்ச்சி துறைக்கு பரிந்துரை செய்யப்பட்டு உள்ளது. ஒப்புதல் கிடைத்தவுடன் சாலை விரிவுபடுத்தும் பணி துவக்கப்படும்' என்றார்.
Tags:    

Similar News