தீயணைப்பு நிலையத்தில் தயார் நிலையில் மீட்பு கருவிகள்

நாகர்கோவில் தீயணைப்பு நிலையத்தில் வெள்ள மீட்பு பணிகளுக்கான கருவிகள் சோதனை செய்யப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

Update: 2024-05-19 04:39 GMT

கருவிகள் பரிசோதனை 

கன்னியாகுமரி மாவட்டத்தில் பருவமழை தீவிரமடைந்றுள்ள நிலையில்,  நாகர்கோவில் தீயணைப்பு நிலையத்தில் உள்ள ரப்பர் படகுகள், கயிறுகள், மோட்டார் என்ஜின்கள், மோட்டார் ரம்பம், ஆக்சிஜன் சிலிண்டர்கள், காலி தண்ணீர் பாட்டில்களால் தயார் செய்யப்பட்ட படகு மற்றும் மிதவை கருவிகள் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளன.  இந்த கருவிகள் அனைத்தும் சரியாக வேலை செய்கிறதா? என்று பரிசோதித்து பார்க்கப்பட்டது. இதற்காக அனைத்து கருவிகளும் தீயணைப்பு நிலைய வளாகத்தில் வைக்கப்பட்டு சோதனை செய்யப்பட்டது. மேலும் தீயணைப்பு துறை 24 மணி நேரமும் தயார் நிலையில் இருக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
Tags:    

Similar News