வளையம்மாதேவியில் கிணற்றில் தவறி விழுந்த புள்ளிமான் மீட்பு

ஆத்தூர் அருகே வளையம்மாதேவி கிராமத்தில் கிணற்றில் தவறி விழுந்த மானை தீயணைப்புத்துறையினர் உயிருடன் மீட்டு வனத்துரையினரிடம் ஒப்படைத்தனர்.;

Update: 2024-03-02 13:25 GMT
வளையம்மாதேவியில் கிணற்றில் தவறி விழுந்த புள்ளிமான் மீட்பு

மீட்கப்பட்ட மான்

  • whatsapp icon

சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே வளையமாதேவி கிராமத்தில் முருகேசன் என்பரவது விவசாய தோட்டத்தில் 60 அடி ஆழமுள்ள கிணற்றில் வனப்பகுதியில் இருந்து இறைத்தேடி வந்த இரண்டரை வயது புள்ளி மான் விவசாய தோட்ட கிணற்றில் தவறி விழுந்துள்ளது.

தகவலறிந்து விரைந்து வந்த தீயணைப்பு நிலைய அலுவலர் அசோகன் தலைமையிலான மீட்பு படையினர் ஒரு மணி நேரம் போராட்டத்திற்கு பின் வலையின் மூலம் மானை உயிருடன் மீட்டனர்.வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

Tags:    

Similar News