ஆதனுார் ஊராட்சி மீது குடியிருப்புவாசிகள் புகார்
ஆதனுார் ஊராட்சி மீது குடியிருப்புவாசிகள் புகார் தெரிவித்துள்ளனர்.
Update: 2024-02-06 06:51 GMT
கூடுவாஞ்சேரி அடுத்த ஆதனுார் ஊராட்சிக்கு உட்பட்ட ஜெயலட்சுமி நகர் குடியிருப்பு பகுதியில், 250க்கும் மேற்பட்ட வீட்டு மனைகள் உள்ளன. இதை வீட்டு மனைகளாக பிரிக்கும் போது, வீட்டு மனைப்பிரிவின் சார்பில், 10 கிரவுண்டுக்கு மேல் பரப்பளவு கொண்ட ஒரு பூங்காவும், 20, 000 சதுர அடி கொண்ட மற்றொரு பூங்காவும் ஒதுக்கப்பட்டது. இந்த மனைப்பிரிவு உருவான 10 ஆண்டுகளில், 100க்கும் மேற்பட்ட கட்டடங்கள் கட்டப்பட்டு, தற்போது, 150 வீடுகளில் மக்கள் வசித்து வருகின்றனர். ஆனால், இங்குள்ள இரண்டு பூங்காக்களும் மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படவில்லை. ஆதனுார் ஊராட்சி நிர்வாகம் மூலம், ஆண்டுக்கு லட்ச ரூபாய்க்கு குத்தகை விடப்பட்டு, ஒரு பூங்கா தனியார் பள்ளி வாகனங்கள் நிறுத்தும் 'பார்க்கிங்'காக செயல்படுகிறது. அதோடு, 10 கிரவுண்டுக்கும் மேலான பரப்பளவு கொண்ட மற்றொரு பூங்காவில், ஊராட்சி சார்பில் அத்தி மரங்கள் வளர்க்கப்பட்டு, மக்களுக்கு பயனின்றி ஊராட்சி நிர்வாகத்தின் பிடியில் உள்ளது என ஆதனுார் ஊராட்சி மீது குடியிருப்புவாசிகள் புகார் தெரிவித்துள்ளனர்.