சூளகிரியில் குடியிருப்பு வாசிகளின் ஆலோசனை கூட்டம்
சூளகிரியில் குடியிருப்பு வாசிகள் மற்றும் காவல்துறையினர் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரியில் குடியிருப்பு வாசிகள் மற்றும் காவல்துறையினர் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் நடைபெற்றது . இந்த கூட்டத்திற்கு சூளகிரி போலீஸ் இன்ஸ்பெக்டர் தேவி தலைமை தாங்கினார் .
இதில் குடியிருப்போர் நல சங்க நிர்வாகிகள் , பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர் . கூட்டத்தில் சூளகிரி போலீஸ் இன்ஸ்பெக்டர் தேவி பேசியதாவது :- சூளகிரி பகுதியில் சட்டம் ஒழுங்கை பேணி காக்க காவல்துறையினருக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும் . குடியிருப்பு பகுதியில் வசிக்க கூடிய பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் . நகைகக்கு பாலிஷ் போட்டு தருகிறேன் என்று கூறி ஏமாற்றும் நபர்கள் உள்ளனர் .
அவர்களிடம் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் . வீடுகளை பூட்டி விட்டு வெளியே செல்லும்போது கவனமாக இருக்க வேண்டும் . வீடுகளுக்கு வெளியே சிசிடிவி கேமராக்கள் பொருத்த வேண்டும் . அதேபோல் சந்தேகத்திற்குரிய நபர்கள் யாரேனும் வந்தால் உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் . சூளகிரி பகுதியில் குற்றங்கள் எதுவும் நடைபெறாமல் இருக்க பொதுமக்கள் காவல்துறையினருக்கு ஒத்துழைப்பு தர வேண்டும் .இவ்வாறு அவர் பேசினார் .
தொடர்ந்து காவல்துறையினர் பொது மக்களுக்கு அவசர தொலைபேசி எண்கள் , காவல் நிலைய எண்கள் வழங்கினார்கள்.