மதுராந்தகம் அருகே கழிவுகள் எரிந்து கடும் புகையால் பொதுமக்கள் அவதி

மதுராந்தகம் அருகே கழிவுகள் எரிந்து கடும் புகையால் பொதுமக்கள் அவதி அடைந்தனர்.

Update: 2024-04-18 08:28 GMT

மதுராந்தகம் அருகே கழிவுகள் எரிந்து கடும் புகையால் பொதுமக்கள் அவதி அடைந்தனர்.


செங்கல்பட்டு மாவட்டம்,மதுராந்தகம் அடுத்த காந்தி நகர் பகுதியில் தனியாருக்கு சொந்தமான நிலத்தில் தனியாருக்கு சொந்தமான தொழிற்சாலை கழிவுகளை கொண்டு வந்து கொட்டி உள்ளனர். இந்தக் கழிவுகள் வெப்ப சலன காரணமாகவா அல்லது வேறொரு யாராவது மர்ம நபர்கள் தீயிட்டு கொளுத்தினார்களா? என தெரியவில்லை. திடீர் என்று எரிந்த கழிவுகள் கரும்புகையால் காந்தி நகர் மட்டுமல்லாமல் மதுராந்தகம் மாம்பாக்கம் சுற்றியுள்ள கிராமங்களில் கரும்புகை சூழ காணப்பட்டதால் மக்கள் அச்சமடைந்து மதுராந்தகம் தீயணைப்பு துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

அங்கு வந்த தீயணைப்புத் துறையினர் நீண்ட நேரம் போராடி தீ அணைக்கும் பணியில்ஈடுபட்டினர். கட்டுங்கடகாமல் எரிந்த தீயை அணைக்க முடியாமல் மேலும் அச்சரப்பாக்கத்தில் இருந்து தீயணைப்பு துறை வாகனம் வரவழைக்கப்பட்டு தீயணைத்து வந்தனர். இந்த கழிவுகள் குடியிருப்பு பகுதியில் எப்படி இந்த கழிவுகளை கொண்டு வந்து இங்கு கொட்டினர் என இந்த கிராமத்தின் மக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

கோடை காலம் என்பதால் வெப்பச்சலனம் அதிகமாக காணப்பட்ட நிலையில் இந்தக் கழிவுகள் தீ எரிந்ததால் இப்பகுதி மக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர். மேலும் இதுபோன்ற கழிவுகளை இங்கே கொட்டி எரித்தால் வீடுகள் குடியிருப்பு பகுதிகள் பாதிக்கப்படும். எனவே இது போன்று சமூக விரோத செயல்பாட்டில் ஈடுபடும் நபர்கள் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags:    

Similar News