சாக்கடை கழிவுநீர் கலந்து வீட்டிற்குள் புகுந்ததால் பொதுமக்கள் அவதி
பாப்பாரப்பட்டி பேரூராட்சி பகுதிகளில் தொடர் கனமழையால் சாக்கடை கழிவுநீர் கலந்து வீட்டிற்குள் புகுந்ததால் பொதுமக்கள் அவதியடைந்தனர்.;
Update: 2024-05-21 06:21 GMT
பாப்பாரப்பட்டி பேரூராட்சி பகுதிகளில் தொடர் கனமழையால் சாக்கடை கழிவுநீர் கலந்து வீட்டிற்குள் புகுந்ததால் பொதுமக்கள் அவதியடைந்தனர்.
தர்மபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி பேரூராட்சி பகுதிகளில் நேற்று இரவு கனமான மழை பெய்ததால் பாப்பாரப்பட்டி பேருந்து நிலையம் சாலை, கடைவீதி சாலை போன்ற பகுதிகளில் சாலையில் மழைநீர் கழிவுநீர் கலந்து சாலையில் தேங்கி நிற்பதால் வாகன ஓட்டிகள் வாகனம் செல்வதற்கு மிகவும் சிரமம் அடைந்தனர். மேலும் பொதுமக்கள் சாலையில் செல்ல முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது பாப்பாரப்பட்டி பேரூராட்சியில் சாலை இருபுறமும் கழிவு நீர் கால்வாய் சரி செய்யாத காரணத்தினால் கால்வாய்கள் அடைக்கப்பட்டு இருக்கிறது இதனால் மழை பெய்தால் மழை தண்ணீர் கழிவுநீர் கால்வாய் தேங்கி இருந்த தண்ணீர் சாலையில் தேங்கி நிற்கிறது சாலை ஓரம் இருக்கும் வீடுகளில் தண்ணீர் புகுந்ததால் சிரமத்திற்கு உள்ளானனர் எனவே பாப்பாரப்பட்டி பேரூராட்சி உடனடியாக தண்ணீர் செல்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.