திமுக நகர்மன்ற தலைவர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம்
திமுக நகர்மன்ற தலைவர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம்
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் நகராட்சி மொத்தம் 30 வார்டு பகுதிகளை கொண்டதாகும். இந்த நிலையில் நகர்மன்ற தலைவராக திமுகவைச் சேர்ந்த உமாமகேஸ்வரி சரவணன் பதவி வகித்தும் அதே போல அதிமுகவை சேர்ந்த கண்ணன் என்ற ராஜூ துணைத் தலைவராகவும் பதவி வகித்து பணியாற்றி வந்த நிலையில் தற்போது நகர மன்ற தலைவர் உமாமகேஸ்வரி சுயலாபத்திற்காக செயல்படுவதாகவும், அடிக்கடி நகர்மன்ற கூட்டங்களை கூட்ட மறுப்பதாகவும் தன்னிச்சையாக செயல்பட்டு வருவதாகவும் கூறி,
அதிமுகவை சேர்ந்த 13 நகர மன்ற உறுப்பினர்கள் மற்றும் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சி நகர மன்ற உறுப்பினர்கள் 10 பேர் என மொத்தம் 23 நகர்மன்ற உறுப்பினர்கள் நகர்மன்ற தலைவர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்து அதனை ஆணையாளர் சபாநாயகம் அவரிடம் ஒப்படைத்தனர்.