முதல்வர் மு.க.ஸ்டாலின் அரசுக்கு நன்றி தெரிவித்து தீர்மானம்

மிக்ஜாம் புயல் பாதிப்பில் துரித நடவடிக்கை மேற்கொண்ட முதல்வர் மு.க.ஸ்டாலின் அரசுக்கு அனக்காவூர் ஒன்றிய குழு கூட்டத்தில் நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

Update: 2023-12-09 13:06 GMT

தீர்மானம் நிறைவேற்றம் 

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

மிக்ஜாம் புயல் பாதிப்பில் துரித நடவடிக்கை மேற்கொண்ட தமிழக - முதல்வர் மு.க.ஸ்டாலின் - தலைமையிலான அரசுக்கு பாராட்டு அனக்காவூர் ஒன்றிய குழு கூட்டத்தில் நன்றி தெரிவித்து தீர்மானம். திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அடுத்துள்ள அனக்காவூர் ஒன்றிய குழு சாதாரண கூட்டம் ஒன்றிய குழு தலைவர் திலகவதி ராஜ்குமார் தலைமையில் நடந்தது பிடிஓ குப்புசாமி அனைவரையும் வரவேற்றார்.

மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக துரித நடவடிக்கை மேற்கொண்டு உரிய நேரத்தில் நிவாரண உதவிகளை வழங்கிய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அரசுக்கு பாராட்டு தெரிவித்து, நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

வடகிழக்கு பருவமழை இடர்பாடுகளை எதிர்கொள்ளவும் வெள்ளத் தடுப்பு பணிகளுக்காக மணல் மூட்டை கொள்முதல் செய்யவும், டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைக்காக கொசு ஒழிப்பு பணியாளருக்கு தினக்கூலி ஊழியர்களின் கணக்கில் செலுத்துவது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

இக்கூட்டத்தில் ஒன்றிய துணைத் தலைவர் அருணா துரை, ஒன்றிய கவுன்சிலர்கள், அலுவலக ஊழியர்கள், பிற துறை ஊழியர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். முடிவில் மேலாளர் சசிகலா நன்றி கூறினார்.

Tags:    

Similar News