குப்பாண்டபாளையம் ஊராட்சி பகுதியை நகராட்சியுடன் இணைக்க தீர்மானம்

குமாரபாளையம் நகராட்சி நகர் மன்ற கூட்டத்தில் குப்பாண்டபாளையம் ஊராட்சி பகுதியை இணைக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது

Update: 2024-01-31 06:33 GMT

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் நகராட்சி 33 வார்டுகளை கொண்ட நகராட்சி நகராட்சி எல்லை சுமார் ஏழு சதுர கிலோ மீட்டர் கொண்டதாகும். சுமார் 2300 வீடுகள் கொண்ட பகுதியில் 72,000 வாக்காளர்கள் உள்ளனர். தங்கராஜ் அருகாமையில் உள்ள துப்பாண்டபாளையம் ஊராட்சி நகராட்சியுடன் இணைத்து முதல்நிலை நகராட்சியாக உள்ள குமாரபாளையம் நகராட்சி பகுதியை தேர்வு நிலை நகராட்சியாக தரம் உயர்த்த தமிழ்நாடு அரசு பரிந்துரை தேர்ந்ததால் அதற்கான கட்டுமான குறித்து நடவடிக்கை  எடுக்கப்படும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. குமாரபாளையம் நகர்மன்ற கூட்டத்தில் கலந்து கொண்ட நடைபெற்ற உறுப்பினர்கள் தங்கள் பகுதிகளில் சாலை வசதிகளும் மற்றும் சாக்கடை கால்வாய் வசதிகளும் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவோ அதனை உடனடியாக அமைத்து தர வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டனர். இதற்கு பதிலளித்த நகர் மன்ற தலைவர் விஜய கண்ணன் குமாரபாளையம் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பழுதடைந்த சாக்கடைக்கால் வகைகளை சீரமைக்கவும் புதிய சாக்கடை கால்வாய்கள் மற்றும் உள்கட்டமைப்பு கட்சிகளை மேற்கொள்ள தமிழ்நாடு அரசிடம் 9 கோடி ரூபாய் கேட்கப்பட்டது. 4 கோடியை 50 லட்ச ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார். இதற்கு தமிழ்நாடு  அரசுக்கு நன்றி தெரிவித்து அனைத்து நகர்மன்ற உறுப்பினர்களும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது

Tags:    

Similar News