ஓய்வுபெற்ற அங்கன்வாடி ஊழியர்கள் ஆட்சியரிடம் மனு
தர்மபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஊக்க ஊதிய உயர்வு தொகை வழங்க கோரி ஓய்வு பெற்ற அங்கன்வாடி ஊழியர்கள் ஆட்சியரிடம் மனு அளித்தனர்.;
Update: 2024-03-15 05:59 GMT
ஆட்சியரிடம் மனு
தர்மபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஊக்க ஊதிய உயர்வு தொகை வழங்ககோரி ஓய்வுபெற்ற அங்கன்வாடி ஊழியர்கள் ஆட்சியரிடம் மனு கொடுத்தனர். அவர்கள் அளித்த மனுவின் விபரம் பின்வருமாறு தருமபுரி மாவட்டத்தில்,அங்கன்வாடி மையங்களில், அமைப்பாளராகவும்,இதில் இருந்து மேற்பார்வை யாளராக பதவி உயர்வு பெற்றவர்களுக்கு சுமார் 10,ஆண்டு முதல் 30 ஆண்டுகாலம் வரை பணயாற்றியவர்களுக்கு, பணிகாலத்திலேயே ஊக்க ஊதிய உயர்வு தொகை வழங்கவேண்டும். ஆனால் அங்கன்வாடி அமைப்பாளராகவும் மேற்பார்வையாளராகவும் பணியாற்றி ஓய்வு பெற்றவர்களுக்கு ஊக்க ஊதிய உயர்வு தொகை வழங்கவில்லை. பணியில் இருந்து ஓய்வுபெற்ற 10 ஆண்டுகாலமாகியும் வழங்கவில்லை.எங்களுக்கு மாதம் ரூ 2000 ஓய்வூதியம் பெற்றுவருகிறோம்.இந்த தொகை எங்கள் வாழ்வாதாரத்திற்கு போதுமானதாக இல்லை.எனவே எங்களுக்கு பணிக்காலத்தில் வழங்கவேண்டிய ஊக்க ஊதிய உயர்வு தொகையை வழங்கவேண்டும் என மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.