திருப்பூரில் ஓய்வுபெற்ற சத்துணவு ஊழியர்கள் கருப்புபேட்ச் அணிந்து பேரணி
திருப்பூரில் சத்துணவு அங்கன்வாடியில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கருப்பு பேட்ஜ் அணிந்து பேரணியில் ஈடுபட்டனர்.
சத்துணவு அங்கன்வாடி திட்டங்களில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்களுக்கு சிறப்பு பென்சன் அகவிலைப்படியுடன் 6 ஆயிரத்தி 750 வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியறுத்தி திருப்பூரில் பெண்கள் கருப்பு பேட்ச் அணிந்து பேரணி நடைபெற்றது .
சத்துணவு அங்கன்வாடி திட்டங்களில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்களுக்கு சிறப்பு பென்சன் அகவிலைப்படியுடன் 6, 750/- வழங்க வேண்டும்., சத்துணவு அங்கன்வாடி திட்டங்களில் பணிபுரிபவர்களுக்கு முறையான காலமுறை ஊதியம் வழங்குவதற்கு ஏதுவாக அனைத்து துறைகளிலும் உள்ள நிரந்தர காலிப்பணியிடங்களில் பணிமூப்பு அடிப்படையில் பதவி உயர்வு வழங்க வேண்டும்.
காலை சிற்றுண்டி திட்ட அமலாக்கத்தை சத்துணவு ஊழியர்களிடம் வழங்க வேண்டும்., தேர்தல் அறிவிப்பாக வாக்குறுதியாக அறிவித்த இந்த வாக்குறுதிகளை உடனடியாக தமிழக அரசு நிறைவேற்ற கோரியும்,
திருப்பூர் மாவட்ட தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கள்வாடி கூட்டமைப்பு சார்பில் பெண்கள் தலைமையில் கருப்பு பேட்ச் அணிந்து பேரணியானது திருப்பூர் தென்னம்பாளையம் மாநகராட்சி பள்ளி அருகில் நடைபெற்றது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு கோரிக்கை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.