சட்டவிரோத பட்டாசு குடோனுக்கு வருவாய் துறையினர் சீல்

சிவகாசி அருகே சட்டவிரோத பட்டாசு குடோனுக்கு வருவாய் துறையினர் சீல் வைத்தனர்.

Update: 2024-05-29 13:54 GMT

சிவகாசி அருகே சரவெடி பதுக்கி வைத்திருந்த குடோனுக்கு வருவாய்த்துறை அதிகாரிகள் சீல் வைத்தனர்.. விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே அனுப்பன்குளம் பகுதியில் தீப்பெட்டி மற்றும் பட்டாசு தனி தாசில்தார் திருப்பதி மற்றும் அதிகாரிகள் பட்டாசு குடன்களில் திடீர் ஆய்வு செய்தனர்.அப்போது நடராஜன் மகன் அருணாசலத்துக்கு சொந்தமான குடோனில் சுப்ரீம் கோர்ட்டால் தடை செய்யப்பட்ட 1000 வாலா 2000 வாலா 5000 வாலா சரவெடிகள் பெட்டி பெட்டியாக பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.இதைத் தொடர்ந்து வருவாய் துறை அதிகாரிகள் அந்த குடோனுக்கு சீல் வைத்தனர்.

இதே போன்று விருதுநகர் தாலுகா வி.முத்துலிங்கபுரத்தில் சக்திவேல்ராஜன் என்பவருக்கு சொந்தமான பட்டாசு கடைகளில் சுப்ரீம் கோர்ட்டால் தடை செய்யப்பட்ட சரவெடிகள் அதிக அளவில் இருப்பு வைக்கப்பட்டிருந்தது.அதனை தொடர்ந்து அந்த குடோனுக்கும் அதிகாரிகள் சீல் வைத்தனர. இதேபோன்று இவருக்கு சொந்தமான பட்டாசு ஆலையில் உற்பத்திக்கு தற்காலிக தடை விதித்து பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

Tags:    

Similar News