செங்கல்பட்டில் வருவாய்த்துறை சங்கத்தினர் உண்ணாவிரத போராட்டம்

செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் 100-க்கும் மேற்பட்ட தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

Update: 2024-02-13 07:36 GMT


செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் 100-க்கும் மேற்பட்ட தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.


தமிழ்நாடு முழுவதும் இரவு பகல் அயராது உழைக்கும் வருவாய்த்துறை அலுவலர்களின் வாழ்வாதார 10 அம்ச கோரிக்கைகளை தமிழக அரசு உடனடியாக நிறைவேற்ற மாநிலம் முழுவதும் மாவட்ட தலைநகர் எழுச்சி மிகு உண்ணாவிரத போராட்டம் நடைபெற்று வருகின்றது. செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் 100-க்கும் மேற்பட்ட தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். துணை வட்டாச்சியர் பட்டியல் திருத்தத்தின் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள பட்டதாரி அலலாத அலுவலர்களின் பணியிறக்கப் பாதுகாப்பு அரசாணையினை உடன் வெளியிட வேண்டும், இளநிலை வருவாய் ஆய்வாளர், முதுநிலை வருவாய் ஆய்வாளர் பெயர் மாற்ற அரசாணையின் அடிப்படையில் விதிதிருத்த ஆணையினை உடன் வெளியிட வேண்டும் என 10 அம்ச கோரிக்கை வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
Tags:    

Similar News