கள்ளக்குறிச்சியில் வருவாய்த் துறையினர் காத்திருப்பு போராட்டம்

கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகத்தில் தமிழ்நாடு வருவாய் துறை அலுவலர் சங்கம் சார்பில் கோரிக்கை வலியுறுத்தி காத்திருப்பு போராட்டம் நடந்தது.;

Update: 2024-02-23 04:07 GMT

கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகத்தில் தமிழ்நாடு வருவாய் துறை அலுவலர் சங்கம் சார்பில் கோரிக்கை வலியுறுத்தி காத்திருப்பு போராட்டம் நடந்தது.


தமிழ்நாடு வருவாய் துறை அலுவலர் சங்கம் சார்பில் கோரிக்கை வலியுறுத்தி காத்திருப்பு போராட்டம் நடந்தது. கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகத்தில் உள்ள டி.ஆர்.ஓ., அலுவலகம் முன், நடந்த போராட்டத்திற்கு மாவட்ட துணை தலைவர் ராஜா தலைமை தாங்கினார். இணை செயலாளர் பாலமுருகன் வரவேற்றார். இதில் துணை தாசில்தார் பட்டியல் திருத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ள பட்டதாரி அல்லாத அலுவலர்களின் பணியிறக்கப் பாதுகாப்புக்கு அரசாணை வெளியிட வேண்டும்.

Advertisement

இளநிலை, முதுநிலை வருவாய் ஆய்வாளர் பெயர் மாற்ற அரசாணையின் அடிப்படையில் விதித்திருத்த ஆணையை வெளியிட வேண்டும். அனைத்து நிலை அலுவலர்களுக்கும் மேம்படுத்தப்பட்ட ஊதியம் வழங்கிட வேண்டும். வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறையில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணியிடங்களை நிரப்ப வேண்டும்.

அனைத்த வட்டங்களிலும் சான்றிதழ் வழங்கும் பணிக்கென புதிய துணை தாசில்தார் பணியிடங்களை ஏற்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கையினை வலியுறுத்தினர். இதில் வருவாய் துறை அலுவலர் சங்கத்தினர் பலர் பங்கேற்றனர்.

Tags:    

Similar News